சுடச்சுட

  

  நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை: எடியூரப்பா

  By dn  |   Published on : 27th November 2013 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் நடந்த நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கு கொள்ளுமாறு யாரும் என்னை அழைக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

  இது குறித்து அவர் பெல்காமில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் நவ. 17-ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அழைப்பு வந்தால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆனால் யாரும் என்னை அதில் கலந்துகொள்ளமாறு அழைப்பு விடுக்கவில்லை. நரேந்திரமோடியும் என்னை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கவில்லை. அவர் அழைத்திருந்தால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். நரேந்திரமோடி தனது உரையின் போது, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க எடியூரப்பாதான் காரணம் என்று கூறியிருக்கலாம். அவர் அதையும் கூற தவறிவிட்டார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எனது தலைமையிலான கஜக இடம் பெற விருப்பம் உள்ளதாக கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே அக்கூட்டணியில் இடம்பெறுவது பற்றி இனி பேசுவதில்லை என முடிவு செய்துள்ளேன். வேறு கட்சியினருடம் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறேன். கஜக கட்சியை பலப்படுத்தி, வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதற்கான வேட்பாளர்கள் யார் என்பதனை இதுவரை முடிவு செய்யவில்லை என்றார்.

  மக்களவை தேர்தலில் நீங்கள் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai