சுடச்சுட

  

  பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்: பிரமோத் முத்தாலிக்

  By dn  |   Published on : 27th November 2013 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருபவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஸ்ரீராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார்.

  இது குறித்து மங்களூரில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு ராஜ உபசாரம் நடக்கிறது. ஆனால் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் பாடுபடுபவர்களுக்கு சிறையில் யாரும் கண்டுகொள்வதில்லை. பயங்கரவாதத்தில் ஈடுபவர்களுக்கு உடல்நிலை மோசமானால் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் சிறிய குற்றங்களை செய்து சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சாதாரண மனிதர் மோசமான நோய்களுக்கும் சிகிச்சை மறுக்கப்படுவதால் சிறைக்குள் இறக்க நேரிடுகிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களையும், அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் ஆரம்பத்திலேயே நடுத்தெருவில் நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்களின் வழக்கு விசாரணைக்காக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றார்.

  மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை நன்னடத்தையை கருத்தில் கொண்டு விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநில சபரிமலைக்கு செல்லும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கு அரசு ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai