சுடச்சுட

  

  வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

  பெங்களூரு முன்னேகோலால் எஸ்ஜேஆர் பல்மருத்துவகல்லூரி சாலையில் வசித்து வருபவர் ராபின்ராபர்ட் (33). தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தனது வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றுவிட்டு, இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தப்போது, வீட்டின் கதவிலிருந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்ததாம். இது குறித்து அவர் எச்.ஏ.எல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிந்த போலீஸார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai