மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்: பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா
By dn | Published on : 27th November 2013 01:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தெரிவித்தார்.
பெல்காம் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வீரக்குமார்பட்டேலின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் அவர் கூறியது: மாநிலத்தில் மழையால் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அவற்றை உடனடியாக சீரமைக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி மணல், ஜல்லிக்கு தட்டுபாடு உள்ளதால் சாலைகளை சீரமைக்க பணிகளை தொடங்க முடியாமல் உள்ளது. மழை நின்றவுடன் மழையால் சேதமடைந்த சாலைகள், புதிய சாலைகள் போடும் பணி தொடங்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்.
மேலும் மைசூர் மாவட்டத்தில் நவ. 27-ம் தேதி முதல் நடைபெறும் பஞ்சலிங்க தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே அப்பகுதியில் உள்ள சாலைகள் போர்கால அடிப்படையில் சீரமைக்கப்படும். மைசூர்-டி.நரசிப்புரா சாலையை அகலப்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றார் அவர்.