Enable Javscript for better performance
வணிக நிர்வாகத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்: பெடரல் வங்கி செயல் இயக்குனர் அப்ரஹாம் சாக்கூர்வர்- Dinamani

சுடச்சுட

    

    வணிக நிர்வாகத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்: பெடரல் வங்கி செயல் இயக்குனர் அப்ரஹாம் சாக்கூர்வர்

    By dn  |   Published on : 27th November 2013 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வணிக நிர்வாகத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று பெடரல் வங்கி செயல் இயக்குனர் அப்ரஹாம் சாக்கூர்வர் தெரிவித்தார்.

    பெங்களூருவில் திங்கள்கிழமை எம்.எஸ்.ராமையா மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடந்த எம்பிஏ மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்டு பட்டமளித்த பின்னர் அவர் பேசியது: சர்வதேச அளவில் இந்தியா ஒரு முக்கிய வணிக மையமாக மாறி வருகிறது. ஆனால் மாணவர்கள் வணிகவியல் கல்வியை பயில அதிகம் காட்டுவதில்லை. குறிப்பாக கர்நாடகத்தில் தகவல், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி சேரவேண்டும் என்று முடிவுடன் அதற்கு தேவையான கல்வியை பயின்று வருகின்றனர். இதனால் வணிக நிர்வாகத்தில் பணி செய்ய ஆட்கள் குறைவாக உள்ளனர். இந்த நிலையில் முதுகலை வணிக நிர்வாகத்தில் அதிக அளவில் மாணவர்கள் இணைந்து கல்வி கற்பதற்கு ஆர்வமாக கலந்து கொண்டு பட்டம் பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. வணிக நிர்வாகத்தில் மாணவர்கள் சிறந்து விளங்குவதன் மூலம் எதிர்காலத்தில் நமது நாட்டை பொருளாதாரத்தில் தலை நிமிரச்செய்ய முடியும் என்றார். நிகழ்ச்சியில் கிர்லோஷ்கர் டயோட்டோ ஜவுளி உபகரணங்கள் பிரிவு துணை மேலாண் இயக்குனர் டி.ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai