வேளாண் விளைப்பொருள் ஆணையம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் கிருஷ்ணேபைரேகௌடா
By பெல்காம் | Published on : 27th November 2013 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெல்காம், நவ. 26: வேளான் விளைப்பொருள் ஆணையம் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக வேளாண்த்துறை அமைச்சர் கிருஷ்ணேபைரேகௌடா தெரிவித்தார்.
பெல்காம் சட்டமேலவையில் செவ்வாய்க்கிழமை பாஜக உறுப்பினர் பாரதிஷெட்டியின் கேள்வி அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் அவர் கூறியது: வேளாண் விளைப்பொருள் ஆணையம் அமைப்பது தொடர்பாக அரசு அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக விவசாயிகள் எதிர்பார்த்து வந்த இந்த ஆணையம் விரைவில் தொடங்கப்படும். அமைக்கப்படும் இந்த ஆணையத்தால் விவசாயிகளுக்கு பயன் அளிக்க வேண்டும். அந்த வகையில் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கும். ஆணையத்தில் விவசாயிகள், விவசாயிகளின் பிரநிதிகள், விவசாய வல்லுநர்கள், அறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும். விவாதத்திற்கு பிறகு விவசாயிகளின் நலன் பயக்கும் மற்ற அம்சங்களும் ஆணையத்தில் சேர்க்கப்படும் என்றார்.
மேலும் போலி பருத்தி, சோள விதைகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் உண்டாகிறது. இதனை தடுக்க அதிகாரிகளுடன் உத்தரவிட்டுள்ளேன். போலி விதைகளால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, விதை தயாரித்த நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். போலி விதைகளை விநியோகம் செய்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றார் அவர்.