சுடச்சுட

  

  பெங்களூருவில் இளைஞர்களுக்கான கலாசார போட்டி வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

  இதுகுறித்து நம்ம ஊடகம் அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

  இந்திய இளைஞர்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தாலும், அதை வெளி கொணர்வதற்கான வழி தெரியாமல் தடுமாறுகின்றனர்.

  இதைக் கருத்தில் கொண்டு வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி பெங்களூருவில் 18 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் பங்கு பெறும் வகையில் "இன்ஸ்பிரேஷன்-2013' என்ற கலாசார போட்டி நடத்தப்படுகிறது.

  இதில் இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த கலாசார நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டுவதுடன், கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்கின்றனர். சிறந்த படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ. 35 ஆயிரம் வழங்கப்படும்.

  மேலும் விவரங்களுக்கு  09167115182, 09167430213 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai