சுடச்சுட

  

  உடல் பயிற்சி குறைந்தால் நோய் தொற்றும் என்று, கன்ட்ரிகிளப் பிட்னஸ் நிறுவத் தலைவர் ராஜீவ் ரெட்டி தெரிவித்தார்.

  அந்த நிறுவனம் சார்பில், பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:

  இந்தியாவில் பலர் உடல்பயிற்சி மேற்கொள்ளாததால், நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றன.

  சிறந்த உடல்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நோய் பாதிப்பு குறையும். அண்மைக் காலமாக உடல்பயிற்சி குறித்து விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

  எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரூ. 350 கோடியில் உலக அளவில் நவீன 100 உடல்பயிற்சி மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்தியா மட்டுமன்றி,  எங்கள் மையத்தின் கிளைகளை பிரிட்டன், ஆப்ரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தொடங்கியுள்ளோம்.

  வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி பெங்களூரு எலஹங்காவில் எங்கள் நிறுவனம் சார்பில் நடைபெறும் புத்தாண்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai