சுடச்சுட

  

  கர்நாடகத்தில் கரும்புக்கு ஆதரவு விலையை டன்னுக்கு ரூ. 2,650- ஆக உயர்த்தப்படும் என்று,  அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  பெல்காமில் புதன்கிழமை விவசாயி விட்டல் அரபாவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது அவர் பேசியது:

  கரும்புக்கு ஆதரவு விலைய உயர்த்த வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விட்டல் அரபாவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது துரதிருஷ்டவசமானது.

  பெல்காம் மாவட்டம், கங்கணவாடியைச் சேர்ந்த விவசாயி விட்டல் அரபாவிக்குச் சொந்தமான 2 ஏக்கர் 12 குன்டா நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு விவசாயத்தில்  நஷ்டம் அடைந்த அவருக்கு, ரூ. 3 லட்சம் வரை கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

  இந்த நிலையில், பெல்காம் சட்டப்பேரவை கட்டடம் முன் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டிருந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

  புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விட்டல் அரபாவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு அரசு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

  அவரது குடும்பத்திற்கு அரசு ரூ. 10 லட்சம்  நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், கரும்புக்கு  டன்னுக்கு ரூ. 2,650 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயியின் தற்கொலையை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது. முந்தைய பாஜக ஆட்சியில் கர்நாடக மாநிலம், ஹாவேரியில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அந்தக் கட்சியினர் மறந்துவிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai