Enable Javscript for better performance
சாலை விபத்தில்  கெம்பாபுராவைச் சேர்ந்த பிரபாகர் உயிரிழந்தார். - Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில்  கெம்பாபுராவைச் சேர்ந்த பிரபாகர் உயிரிழந்தார்.

    By பெங்களூரு  |   Published on : 28th November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில்  கெம்பாபுராவைச் சேர்ந்தவர் பிரபாகர் (22) உயிரிழந்தார்.

    செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர் துர்கபிரசாத்துடன் மோட்டார் சைக்கிளில் யமலூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது,  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.பெங்களூரு, நவ. 27:  பெங்களூருவில் பெண் மருத்துவரை வழிமறித்து அவரிடமிருந்து தங்கச் சங்கிலி, ஸ்கூட்டரை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு கிரிநகரைச் சேர்ந்தவர் பூர்ணிமா தினேஷ் (35). பெண் மருத்துவரான இவர்,  செவ்வாய்க்கிழமை 10.45 மணியளவில் ஸ்கூட்டரில் தனியார் மருத்துவமனையில் உள்ள தனது சகோதரியை பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தாராம்.

    கிரிநகர் வாலிபால் மைதானம் அருகே அவரை வழிமறித்த மர்ம நபர், கல்லால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்கச் சங்கிலி, ஸ்கூட்டரை பறித்துக் கொண்டு தப்பினார்.

    இதுகுறித்து கிரிநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai