சுடச்சுட

  

  "நடைபாதையில் வாகனங்கள் செல்வது தடுக்கப்படும்

  By 'பெங்களூரு,  |   Published on : 28th November 2013 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடைபாதையில் வாகனங்கள் செல்வது தடுக்கப்படும் என்று, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்தார்.

  பெங்களூருவில் புதன்கிழமை பாதசாரிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமைத் தொடங்கிவைத்து அவர் பேசியது:

  பெங்களூருவில் நிகழும் சாலை விபத்துகளில் பாதசாரிகளே அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர். இதற்கு காரணம் பாதசாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட நடைபாதைகளில் வாகனங்கள் பயணிப்பதேயாகும்.

  இதுகுறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதசாரிகள்   சாலைகளில் நடப்பதைத் தவிர்த்து, நடைபாதைகளில் நடக்க வேண்டும். இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

  மாநகராட்சி சிறப்பு ஆணையர் எம்.யஷ்வந்த் பேசியது:

  பெங்களூரு மாநகராட்சி 825 சதுர கி.மீட்டராக பரவியுள்ளதால், நடைபாதைகளை அமைப்பதே சவாலாக உள்ளது. பாதசாரிகள் சாலைகளை தாண்ட முற்படும் போது, விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

  முகாமில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் தயானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai