சுடச்சுட

  

  கர்நாடகத்தில் ஊரக சாலைகளைச் சீரமைக்க ரூ. 109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அந்த மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

  பெல்காமில் புதன்கிழமை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ராய்ச்சூர் எம்.எல்.ஏ. சிவராஜ் பாட்டீல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:

  ஊரக சாலைகளைப் பழுது பார்க்கவும், பராமரிக்கவும் ரூ. 109.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் கண்காணிக்கும்.

  இதேபோல, சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளை இந்தக் குழுக்களே அடையாளம் காணும், 100 கி.மீ. தொலைவுக்கு ஊரக தார் சாலைகளைப் பழுது பார்க்க ரூ. 10 லட்சம் செலவிடப்படும். மண் சாலைகளைச் சீரமைக்க ரூ. 5 லட்சம் செலவிடப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai