சுடச்சுட

  

  எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் இணைக்க நடவடிக்கை

  By பெங்களூரு  |   Published on : 29th November 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  பாஜகவில் எடியூரப்பாவை இணைத்துக் கொள்வது குறித்து கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவர்களும் எடியூரப்பாவை இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

  இதனிடையே, 5 மாநிங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறுவதால், வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி வரை அதில் பாஜக மேலிடத் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் பிறகு, எடியூரப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை பாஜகவில் இணைப்பது தொடர்பாக முடிவு எடுப்பார்கள்.

  எடியூரப்பாவின் சேவை பாஜகவிற்குத் தேவை என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். வருகிற டிசம்பரில் எடியூரப்பா பாஜகவில் இணைவது தொடர்பாக நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai