Enable Javscript for better performance
ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வெள்ளிக்கிழமை (நவ.29) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. சீனிவாஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    பெங்களூரு மாநகராட்சியில் கட்டுமானம், மின்சாரப் பணி செய்வதற்காக சுமார் 2,500 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். அவர்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் பல்வேறு பணிகளைச்  செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த 15 மாதங்களாக ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால், ஒப்பந்ததாரர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

    கடன் தொல்லையால் 2 நாள்களுக்கு முன் ஒரு ஒப்பந்ததாரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    இதே நிலைக்கு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா, மாநில அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

    இதனால், வெள்ளிக்கிழமை (நவ.29) முதல் நாங்கள் வேலைநிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai