சுடச்சுட

    

    காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை

    By பெல்காம்  |   Published on : 29th November 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசில் விவசாயிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.

    பெல்காமில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கரும்புக்கு ஆதரவு விலையை உயர்த்தக் கோரி, கர்நாடக மாநிலம், பெல்காமில்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விட்டல் அரபாவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவே பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    கரும்புக்கு ஆதரவு விலையை மேலும் ரூ. ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். முதல்வர் சித்தராமையா சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்வதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai