சுடச்சுட

  

  சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பாஜக தர்னா

  By பெல்காம்  |   Published on : 29th November 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி, பெல்காமில் பாஜகவினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

  பெல்காம் சுவர்ண விதான செüதா கட்டடம் முன் கரும்பு விவசாயி விட்டல் அரபாவி புதன்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன் பாஜகவைச் சேர்ந்த  சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள், முன்னாள் முதல்வர்கள் சதானந்த கெüடா, ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சுவர்ண விதான செüதா முன் தர்னாவில் ஈடுபட்டனர்.

  முன்னதாக, சுவர்ண விதான செüதா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுவர்ண விதான செüதா வரை கருப்பு துண்டு அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

  தர்னாவில் ஈடுபட்ட பாஜகவினர் விவசாயி தற்கொலைக்கு காரணமான முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும். கரும்புக்கு ஆதரவு விலையை கூடுதலாக ரூ. ஆயிரம் வரை உயர்த்த வேண்டும்.

  கரும்பு விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai