சுடச்சுட

  

  பெங்களூருவில் பள்ளி மாணவர்களுக்கான கலாசார போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ.29) தொடங்குகின்றன.

  இதுகுறித்து வித்யாஞ்சலி அகாதெமிபார் லர்னிங் அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

  பெங்களூரு ஆர்.டி.நகரில் வித்யாஞ்சலி அகாதெமிபார் லர்னிங் அமைப்பு வளாகத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இன்ஸ்பைரோ-2013 என்ற பள்ளி மாணவர்களுக்கான கலாசார போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 150 பள்ளிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் நடனம், பாடல், கட்டுரை, கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

  வெற்றி பெறுபவர்களுக்கு விருதுடன், சான்றிதழ் வழங்கி கெüரவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-23544891, 23433818 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai