Enable Javscript for better performance
பாதுகாப்பு கருவிகள் பொருத்த கால நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்பு கருவிகள் பொருத்த கால நீட்டிப்பு

    By பெங்களூரு,  |   Published on : 29th November 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு கருவிகள் பொருத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெங்களூருவில் கடந்த 19-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் பெண் வங்கி மேலாளர் ஜோதி உதய் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும். மையங்களில் சிசிடிவி கேமராக்கள், எச்சரிக்கை மணி ஆகியவை பொருத்த வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    இதை செயல்படுத்தாத ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து,  பாதுகாவலர்களை நியமிக்காத ஏடிஎம் மையங்களுக்கு கடந்த 24-ஆம் தேதி பூட்டு போடப்பட்டன.

    இந்த நிலையில், ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாவலர்கள், எச்சரிக்கை கருவிகள் பொருத்த கால அவகாசம் வழங்கக் கோரி வங்கிகள் கோரிக்கை விடுத்தன.

    இதையடுத்து, வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை 45 நாள்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai