சுடச்சுட

  

  தொழில் துறையில் சவூதி அரேபியா} இந்தியா ஒன்றிணைய வேண்டும்

  By பெங்களூரு  |   Published on : 30th November 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொழில் துறையில் சவூதி அரேபியாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று, கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் விருப்பம் தெரிவித்தார்.

  பெங்களூரு சந்தாபுரா சாலையில் உள்ள ஹொசஹள்ளியில் இந்திய- சவூதி அரேபியா கூட்டணியில் அமைக்கப்பட்டுள்ள சாபிக் தொழில்நுட்ப மையத்தை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியது:

  இந்தியாவும், சவூதி அரேபியாவும் பொருளாதார, உறவு ரீதியாக நீண்ட நாள்கள் ஒற்றுமையுடன் உள்ளது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மெüலான ஆசாத், சவூதி அரேபியாவில் உள்ள மக்காவில் பிறந்தவர். அங்கு பிறந்த அவர், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்.

  இந்திய, சவூதி அரேபிய கூட்டணியில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப மையம் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் பலப்படுத்தும். சவூதி அரேபியாவுடன் இணைந்து தொழில் தொடங்குவதால், நமது நாடு மேலும் அதிகம் பலம் பெறும்.

  தொழில்நுட்பத்தில் சிறந்த இந்தியாவும், பொருளாதாரத்தில் சிறந்த சவூதி அரேபியாவும் தொழில் துறையில் ஒன்றிணைவதால், சர்வதேச அளவில் இரு நாடுகளும் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

  மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் ரகுமான்கான் பேசியது: சவூதி அரேபியாவின் சாபிக் தொழில்நுட்ப மையம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவில் தொழில்  தொடங்க அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளது மேலும் பெருமையாக உள்ளது.

  7-ஆவது நூற்றாண்டிலேயே இந்தியாவுடன் சவூதி அரேபியா வணிகத்தில் தொடர்பு வைத்திருந்தது. இந்தியாவைச் சேர்ந்த 50 லட்சம் பேர் சவூதி அரேபியாவில் பணி செய்து வருகின்றனர்.

   இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள சாபிக் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.

  விழாவில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், சாபிக் தொழில்நுட்ப மையத்தின் தலைவருமான செüத்பின் அப்துல்லாபின் தெனாயன் அல்செüத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai