சுடச்சுட

  

  போட்டோன் மேக்ஸ் ஓய்-பையில் இணையதள இலவச ரோமிங் வசதி

  By பெங்களூரு  |   Published on : 30th November 2013 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டாடா டொக்கமோ நிறுவனம் சார்பில் போட்டோன் மேக்ஸ் ஓய்-பையில் இணையதள இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அந்த நிறுவனத்தின் கர்நாடக வர்த்தகப் பிரிவு தலைவர் ரோஹித் தண்டன் கூறியது:

  டாடா டொக்கமோ நிறுவனம் சார்பில் ஏற்கெனவே போட்டோன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம், கணினி, மடிக் கணினியில் இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  தற்போது இணையதள சேவையை விரைவாக பயன்படுத்திக் கொள்ளுவதற்கு வசதியாக போட்டோன் மேக்ஸ் ஓய்-பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் மூலம் 5 சாதனங்களில் இணையதள சேவையை  ஒரே நேரத்தில்  பயன்படுத்திக் கொள்ளலாம்.  தேசிய அளவில் இதன் ரோமிங் வசதியை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai