சுடச்சுட

  

  பெங்களூரு யஸ்வந்தபுரம்- மீரஜ் இடையே வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

  இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  யஸ்வந்தபுரத்திலிருந்து (ரயில் எண்-06517) வருகிற டிசம்பர் 1, 3, 5 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு, தும்கூர், அரிசிகெரே, தாவணகெரே, ஹுப்ளி, தார்வாட், பெல்காம், கட்டபிரபா, குடச்சி வழியாக மறுநாள் காலை 10.15 மணியளவில் மீரஜை சென்றடையும்.

  மறு மார்க்கத்திலிருந்து வருகிற டிசம்பர் 2, 4, 6 ஆகிய தேதிகளில் மீரஜ்ஜிலிருந்து (ரயில் எண்-06518) மாலை 4,45 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணியளவில் யஸ்வந்தபுரத்தை வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாளை இலவச யுனானி மருத்துவ ஆலோசனை முகாம்

  பெங்களூருவில் இலவச யுனானி மருத்துவ ஆலோசனை முகாம் ஞாயிற்றுக்கிழமை  (டிசம்பர் 1) நடைபெறுகிறது.

  இதுகுறித்து கர்நாடக யுனானி மருத்துவச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெங்களூரு சோமேஸ்வரநகர் டேங்க் கார்டன் முக்கிய சாலையில் அருகே இலவச யுனானி மருத்துவ ஆலோசனை முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நடைபெறுகிறது. இந்த முகாமில் மூட்டுவலி, இடுப்புவலி, கழுத்துவலி, நரம்புவலி, கை, கால்களில் ஏற்படும் வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai