சுடச்சுட

    

    விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அனுமதி ரத்து

    By பெங்களூரு,  |   Published on : 30th November 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      பெங்களூருவில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ள அனுமதி ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி ஆணையர் லட்சுமி நாராயணா தெரிவித்தார்.

    பெங்களூரு மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை மேயர் சத்தியநாராயணா தலைமையில், ஆணையர் லட்சுமி நாராயணா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மகாலட்சுமி வார்டு பாஜக உறுப்பினர் ஹாரிஷ் பேசியது:

    பெங்களூருவில் முக்கியப் பகுதிகளில் பிரபல நிறுவனங்கள் அடுக்குக் மாடி கட்டடங்களை  கட்டி வருகின்றன. அவர்கள் மாநகராட்சி வழங்கிய அனுமதியைவிட கூடுதலாக பல அடுக்குகளைக் கட்டியுள்ளனர். இது, விதிமுறைகளை மீறிய செயலாகும்.

    இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    விதிமுறைகளை மீறி கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். மேலும், அதுதொடர்பான ஆதரங்களை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இதற்குப் பதிலளித்து ஆணையர் லட்சுமி நாராயணா பேசியது:

    மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக மாமன்ற உறுப்பினர் உரிய ஆதாரங்களை வழங்கியுள்ளார்.

    விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும். இந்த கட்டடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai