விரைவில் குணமடைவேன்
By பெங்களூரு | Published on : 30th November 2013 05:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவேன் என்று, பெங்களூரு ஏடிஎம் மையத்தில் மர்ம நபரால் தாக்குதலுக்கு ஆளான வங்கி ஊழியர் ஜோதி உதய் தெரிவித்தார்.
பெங்களூருவில் கடந்த 19-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் பெண் வங்கி மேலாளர் ஜோதி உதய் மர்ம நபரால் தாக்குதலுக்கு ஆளானார். தலை, முகத்தில் பலத்த காயமடைந்து பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவர்களின் சிறப்பு சிகிச்சையால் படிப்படியாக குணமடைந்து வருகிறேன். விரைவில் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்வேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார் அவர். மேலும், மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் பேச மறுத்துவிட்டார். பிஜிஎஸ் மருத்துவமனை மருத்துவர் வெங்கடரமணா கூறியது:
ஜோதி உதயின் தலையில் ஏற்பட்ட வெட்டு காயத்தால், சிறிய எலும்பு துண்டு மூளையில் பதிந்திருந்தது. அதை அறுவைச் சிகிச்சை செய்து வெளியேற்றினோம். இதனால், அவரது உடலின் வலது பகுதி செயல் இழந்துள்ளது.
தற்போது அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவரது வலது பகுதி லேசாக செயல்படத் தொடங்கியுள்ளது. 6 மாதத்தில் முழுமையாக அவர் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.