கர்நாடகத்தில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று, அந்த மாநில கால்நடைத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர் அருண் ஷகாபுராவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
5 ஆயிரத்திற்கு அதிகமான கால்நடைகள் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் தலா ஒரு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிகழாண்டு, கர்நாடகத்தில் 100 புதிய மருத்துவமனைகள் திறக்கப்படும். ஏற்கெனவே உள்ள 100 மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகையாக லிட்டர் பாலுக்கு ரூ. 4 கூடுதலாக வழங்கப்படும். இதற்காக நிகழாண்டில் ரூ. 825 கோடி ஒதுக்கப்படும் என்றார் அவர்.