பெங்களூரு மாநகரில் சில பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அம்ருத்தஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக பெங்களூர் மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) தெரிவித்தது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பி.பி.சாலை, ஜக்கூர் லேஅவுட், யு.ஏ.எஸ் லேஅவுட், பசவேஸ்வரிநகர், கெம்பாபுரா வெங்கடகெளடா லேஅவுட், பம்பா எக்ஸ்டென்டஷன், சிரஞ்சிவி லேஅவுட், யோகேஷ்நகர், அட்டூர் லேஅவுட், சந்தோஷ் நகர், முனீஸ்வரா லேஅவுட், ஸ்வாகத் லேஅவுட், வீரசாகரா, தொட்டபெட்டஹள்ளி லேஅவுட், சோமேஸ்வராநகர், பேட்டராயனபுரா, அம்ருத்தஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.