கர்நாடகத்தில் 7 மாநகராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று, அந்த மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வினய்குமார் சொரகே தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை காங்கிரஸ் உறுப்பினர் வீரக்குமார் அப்பாúஸா பாட்டீலின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
கர்நாடகத்தில் உள்ள 7 மாநகராட்சிகளில் காலியாக உள்ள 3,811 பணியிடங்களும், புதிதாக உருவாக்கப்படும் 3 மாநகராட்சிகளில் உள்ள 1,989 பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும்.
கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சிகளில் ஏ,பி,சி,டி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதுகுறித்து அண்மையில் அமைச்சரவையில் விவாதித்து, விரைவில் "டி' பிரிவில் 990 பணியிடங்கள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காலியாக உள்ள மற்ற பிரிவு பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்படும்.
நகப்புற வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை படிப்படியாக குறைத்து, புதிய ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.