Enable Javscript for better performance
\\\"காங்கிரஸின் ஊழல்களால்  பாஜக வாக்கு வங்கி அதிகரிப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் அரசின் ஊழல்களால் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று, கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
     இதுகுறித்து தாவணகெரேயில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
     வரும் மக்களவை தேர்தலில் பாஜக 20-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. கடந்த பாஜக ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன.
     மக்களவைத் தேர்தலுக்காக பாஜக பல முன்னேற்பாடுகளைத் திட்டமிட்டு செய்து, அதன்படி செயல்பட்டு வருகிறது. இதனால், பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் எதிர்க் கட்சிகள் எதையும் திட்டமிடாததால் அங்கு குழப்புமும், கொந்தளிப்பும் இருந்து வருகிறது.
     நரேந்திர மோடி அலையுடன், திட்டமிட்டு தேர்தல் பணிகளைச் செய்து வருவதால், மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.
     பாஜக தேர்தலில் ஜாதி, பணம், மது ஆகியவற்றை முன்வைத்து அரசியல் செய்யாமல் நேர்மையாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
     ஷிமோகா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மாவட்டத்தில் செய்த வளர்ச்சிப் பணிகளே அவரை வெற்றி பெறச் செய்யும்.
     ஆனால், மஜத சார்பில் போட்டியிடும் கீதா சிவராஜ்குமார், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மஞ்சுநாத் பண்டாரி ஆகியோர் யார் என்பதே மக்களுக்கு தெரியவில்லை. இதனால் எடியூரப்பாவின் வெற்றி எளிதாகியுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai