Enable Javscript for better performance
காங்கிரஸுக்கு எதிராக  பாஜக, மஜத உள் ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸுக்கு எதிராக  பாஜக, மஜத உள் ஒப்பந்தம்

    By  பெங்களூரு,  |   Published on : 27th March 2014 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக பாஜக, மஜத உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்று முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.
     பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:
     கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க பாஜக, மஜத கட்சிகள் உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதனால், மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை வேட்பாளர்களாக்கி, பாஜகவுக்கு மஜத உதவி வருகிறது. மஜத கட்சியில் எந்தவிதமான சித்தாந்தமும் இல்லை. அந்தக் கட்சி சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறது. மதவாதக் கட்சியான பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் கவலை இல்லை, ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதில் முன்னாள் பிரதமர் தேவ கெüடா குறியாக உள்ளார்.
     பாஜக வெற்றி பெற்றால் நாட்டின் வளர்ச்சி தடைபடும். தொழிலதிபர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு பல கோடி ரூபாயை தேர்தல் நிதியாக அவர்கள் வழங்கியுள்ளனர். கர்நாடகத்தில் மோடியின் அலை எடுபடாது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மங்களூர், உடுப்பி உள்ளிட்ட இடங்களில் நரேந்திர மோடி பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை.
     மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் 20 இடங்களைக் கைப்பற்றும் என்றார் அவர். கூட்டத்தில், அமைச்சர் ரோஷன் பெய்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai