Enable Javscript for better performance
சாலை சீரமைப்புப் பணியால்  போக்குவரத்தில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சாலை சீரமைப்புப் பணியால்  போக்குவரத்தில் மாற்றம்

    By  பெங்களூரு,  |   Published on : 27th March 2014 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு ஹைகிரவுண்ட் போக்குவரத்து
     காவல் சரகத்தில் உள்ள கன்னிகாம் சாலை - செüடய்யா சதுக்கம் இடையிலான சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெறுவதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
     இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     பெங்களூரு ஹைகிரவுண்ட் போக்குவரத்து காவல் சரகத்தில் உள்ள கன்னிகாம் சாலை - செüடய்யா சதுக்கம் இடையை சாலைப் பழுது பார்க்கும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. எனவே, புதன்கிழமை (மார்ச் 26) முதல் கன்னிகாம் சாலை - செüடய்யா சதுக்கம் வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
     செüடய்யா சாலையிலிருந்து கன்னிகாம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் ஹைகிரண்ட் சதுக்கத்திலிருந்து இடது புறமாக திரும்பி, அவினாஷ் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வலது புறமாக திரும்பி கன்னிகாம் சாலைக்கு செல்லலாம். சந்திரிகா ஹோட்டல் சதுக்கத்திலிருந்து கன்னிகாம் சாலைக்கு வரும் வாகனங்கள் அவினாஷ் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வலது புறமாக திரும்பி, மெüன்ட் கார்மல் கல்லூரி சதுக்கம் வழியாக வசந்த நகர் ரயில் சுரங்கப் பாதையில் சென்று அரண்மனைச் சாலையை அடையாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai