Enable Javscript for better performance
சிக்பள்ளாபூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்?  குமாரசாமி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிக்பள்ளாபூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்?  குமாரசாமி விளக்கம்

    Published on : 27th March 2014 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பின் தங்கிய தொகுதியாக சிக்பள்ளாபூர் உள்ளதால், மக்களவைத் தேர்தலில் அங்கு போட்டியிட முடிவு செய்தேன் என்று, முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
     கர்நாடக மாநிலம், சிக்பள்ளாபூரில் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் மஜத சார்பில் தனது வேட்பு மனுவை மனைவி அனிதா குமாரசாமியுடன் சென்று தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     ராம்நகர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள நான், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. ஆனால், சிக்பள்ளாபூரில் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதால், மக்கள் அவரை எதிர்த்து நிற்குமாறு என்னை கேட்டுக் கொண்டனர். கட்சியினரும் வற்புறுத்தினர். அவர்கள் பேச்சை மீற முடியாமல் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். சிக்பள்ளாபூர் மக்களவைத் தொகுதி மிகவும் பின் தங்கியுள்ளது. இங்கு வெற்றி பெற்று மத்திய அமைச்சரான வீரப்பமொய்லி தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை.
     சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாலித், ஏழைகள் அதிகமுள்ள இந்தத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
     இங்குள்ள மக்கள் என் மீது அதிக அன்பும், ஆதரவும் அளிப்பதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
     கர்நாடகத்தில் எங்கள் கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள 12 தொகுதிகள் வரை வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்பு போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நகர் மக்களவைத் தொகுதி மக்களை ஒரு போதும் நான் மறக்க மாட்டேன் என்றார்.
     முன்னதாக, அவர் நந்திகிராமத்தில் உள்ள நந்தீஸ்வர், வீராஞ்சநேயா கோயில்களில் சிறப்பு பூஜைகளைச் செய்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai