Enable Javscript for better performance
\\\"பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி'

    By  பெங்களூரு,  |   Published on : 27th March 2014 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதத்தை தடுப்பதில் மத்திய, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்று, பெங்களூரு மத்திய தொகுதி பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் தெரிவித்தார்.
     பெங்களூரு மத்திய தொகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு எல்லையோரத்தில் பயங்கரவாதத்தை தடை செய்வதில் தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசின் மெத்தனப் போக்கினால் எல்லைப் பகுதியில், சீனா பல கிலோ மீட்டர் நிலப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
     பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி வருவது சர்வ சாதாரணமாகி வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தப்போது கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. நரேந்திரமோடி முதல்வர் ஆன பிறகு குஜராத் மாநிலம் பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தொழில் துறையில் மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது. அவர் நாட்டின் பிரதமர் ஆனால் அனைத்து துறைகளிலும் நாடு சிறப்பான வளர்ச்சியை அடையும். காங்கிரஸ் ஆட்சியில் தேசிய அளவில் ஊழல் மலிந்து வருகிறது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai