Enable Javscript for better performance
பெங்களூரு ஆம் ஆத்மி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.190 கோடி- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு ஆம் ஆத்மி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.190 கோடி

    By  பெங்களூரு  |   Published on : 27th March 2014 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பாலகிருஷ்ணனின் சொத்து மதிப்பு
     ரூ. 190 கோடி என தெரிவித்துள்ளார்.
     பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரான பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
     இவர் மார்ச் 24-ஆம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ. 154 கோடி, மனைவி சித்ரா பெயரில் ரூ. 19.34 கோடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
     மேலும், குடும்பத்தினருக்கு பெங்களூருவில் வீடுகளும், மனைவிக்கு சென்னையில் வீடும் உள்ளதாம். அவரது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 190 கோடி என அவர் தெரிவித்துள்ளார்.
     பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பாலகிருஷ்ணனும், பாஜக சார்பில் பி.சி.மோகனும், காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்ஷத்தும், மஜத சார்பில் முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மனைவி நந்தினி ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai