Enable Javscript for better performance
பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து  தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து  தற்கொலை முயற்சி

    By  பெங்களூரு,  |   Published on : 27th March 2014 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகரப் பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
     பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் கிருஷ்ணப்பா. இவர் புதன்கிழமை வசந்த் நகரிலிருந்து வீரண்ணபாளையத்துக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். அரண்மனைச் சாலையிலிருந்து எப்பால் மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்ததையடுத்து, பேருந்தை மேம்பாலத்தின் மீது இயக்கினராம்.
     இதனால், விதிகளை மீறியதாக அவர் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     இதனால், மனம் வருந்திய அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மயங்கி விழுந்த அவரை போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
     இதுகுறித்து ஹெப்பால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai