Enable Javscript for better performance
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்:  சதானந்த கெளடா- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்:  சதானந்த கெளடா

    By  பெங்களூரு,  |   Published on : 27th March 2014 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சதானந்தகெüடா தெரிவித்தார்.
     பெங்களூருவில் புதன்கிழமை கிரிநகரில் உள்ள ராமசந்திரபுரா மடத்தின் மடாதிபதி ராகவேஸ்வர பாரதியை சந்தித்து ஆசிபெற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
     பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெற ராகவேஸ்வர பாரதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றேன். தேசிய அளவில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
     காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களால் வேதனை அடைந்துள்ள மக்கள், மத்தியில் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜகவை ஆட்சியில் அமர்த்த முடிவு செய்துள்ளனர்.
     கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கான எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யவில்லை. 10 மாத ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் மேற்கொள்ளாமல் தோல்வி அடைந்துள்ளது. இதனால், மக்கள் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கருதுகின்றனர். கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக 20-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். அதிக வாக்காளர்களை கொண்டுள்ள பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai