Enable Javscript for better performance
மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பு:  போக்குவரத்து கூடுதல் ஆணையர் தயானந்த்- Dinamani

சுடச்சுட

    

    மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பு:  போக்குவரத்து கூடுதல் ஆணையர் தயானந்த்

    By  பெங்களூரு,  |   Published on : 27th March 2014 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன என்று, பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையர் தயானந்த் தெரிவித்தார்.
     இதுகுறித்து புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     பெங்களூருவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
     மது அருந்திவிட்டு சிலர் செய்யும் தவறுக்கு அப்பாவிகள் பலியாக நேரிடுகிறது. இதுகுறித்து காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முகாம்கள் நடத்தி வருகிறது.
     மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விழிப்புணர்வு விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
     என்றாலும் பெரும்பாலானவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. மாநகரில் 2 வாரங்களாக விதிகளை மீறி வாகனங்களை இயக்கிவர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்து வருகிறோம்.
     இதில், 2,500 பேர் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை (மார்ச் 22) இரவு மட்டும் சுமார் 1,070 பேர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென ஓட்டுநர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai