Enable Javscript for better performance
\\\"வலிப்பு நோய் குறித்து  விழிப்புணர்வு தேவை\\\'- Dinamani

சுடச்சுட

    

    வலிப்பு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று, மூத்த நரம்பியல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
     பெங்களூருவில் புதன்கிழமை உலக வலிப்பு நோய் தினத்தையொட்டி சாகர் மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
     இதில் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் பேசியது:
     சர்வதேச அளவில் 6.5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முறையை ஒரு சில மருத்துவர்களே அறிந்துள்ளனர்.
     வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
     இந்த நோய் குறித்து அரசும், தனியார்களுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முன்வரவேண்டும் என்றார் அவர்.
     நிகழ்ச்சியில் நரம்பியல் மருத்துவர்கள் சுஜித்குமார், பவானி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai