Enable Javscript for better performance
வியாபாரிகளிடம் கொள்ளை  முயற்சி: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு சிட்டி மார்க்கெட் காவல் சரகத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தாக, பெங்களூரு நீலசந்திரா பகுதியைச் சேர்ந்த வாஜீர்கான் (38), திப்புநகர் இனாயத் (43), சிட்டி மார்க்கெட் ஹபீப் (33), பனசங்கரி சையத் கலீம் (38), ஆர்.ஆர்.நகர் சிவண்ணா (44) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, மிளகாய்ப் பொடி பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சிட்டி மார்க்கெட் போலீஸார் மேலும் விசாரணை செய்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai