Enable Javscript for better performance
7-ஆவது நாளில் 225 வேட்பாளர்கள் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    7-ஆவது நாளான புதன்கிழமை மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக 225 வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
     கர்நாடகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கியது. 7--ஆவது நாளான புதன்கிழமை கர்நாடகத்தின் 28 தொகுதிகளிலும் 225 வேட்பாளர்கள் 380 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
     இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை மாநில தேர்தல் அதிகாரி அனில்குமார்ஜா, செய்தியாளர்களிடம் கூறியது:
     7-ஆவது நாளான புதன்கிழமை 28 தொகுதிகளில் 225 வேட்பாளர்கள் மொத்தம் 380 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
     இதன்மூலம் கடந்த 7 நாள்களில் 28 தொகுதிகளில் மொத்தம் 559 வேட்பாளர்கள் 845 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
     சிக்பள்ளாபூர் தொகுதியில் மஜத வேட்பாளராக எச்.டி.குமாரசாமி, சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் பிரகாஷ் ஹுக்கேரி, குல்பர்கா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் லலிதாநாயக், மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ரம்யா, பெங்களூரு மத்திய தொகுதியில் மஜத சார்பில் நந்தினி ஆல்வா, தென்கன்னட தொகுதியில் காங்கிரஸ்சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்தனபூஜாரி, பாஜக சார்பில் நளின்குமார் கட்டில் உள்ளிட்டோர் வேட்புமனுதாக்கல் செய்தவர்களில் முக்கியமானவர்கள்.
     தேர்தல் முறைகேடுகள்: பெல்காம் மாவட்டம் ஆலூரில் ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
     பப்பநாடு சுங்கச் சாவடியில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தார்வாடில் ரூ. 2 லட்சம் உள்பட இதுவரை ரூ. 2.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
     சிக்பள்ளாபூரில் தேர்தல் முறைகேடுகளுக்கு பயன்படுத்த கொண்டு சென்ற ரூ.13.20 லட்சம் மதிப்புள்ள 1440 சேலைகள், பெல்காம் மாவட்டத்தில் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றியுள்ளோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai