Enable Javscript for better performance
\\\"அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் \\\'- Dinamani

சுடச்சுட

    

    "அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் '

    By பெங்களூரு  |   Published on : 17th April 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழைகள், புதிதாக குடியேறியவர்கள் அனைவருக்கும் உடனடியாக சமையல் எரிவாயு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாங்க் ஆப் பரோடா துணை பொது மேலாளர் ரஜனீஷ் சர்மா வலியுறுத்தினார்.

    பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டரை கிலோ எடையுள்ள எரிவாயு உருளையை அறிமுகம் செய்து அவர் பேசியது:

    அரசு அறிமுகம் செய்துள்ள 14.2, 5 கிலோ எரிவாயு உருளைகள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. எனினும், பெங்களூரில் உள்ள ஏழைகள், தொழிலாளிகள், புதிதாக குடியேறியவர்கள் எரிவாயு இணைப்பு பெறுவதில் நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசின் அனுமதியுடன் எம்.வி.ஆர் நிறுவனத்தினர் இரண்டரை கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையை அறிமுகம் செய்து வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. குடிசைவாசிகள், புதிதாக குடியேறியவர்கள், ஏழைகளிடம் இது நல்ல வரவேற்பை பெறும் என்றார்.

    நிகழ்ச்சியில் எம்.வி.ஆர். நிறுவனத்தின் தலைவர் தனசேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சாலை விபத்துகளில் இருவர் சாவு

    பெங்களூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

    பசவனகுடி போக்குவரத்து காவல் சரகம்: பெங்களூரு எஸ்.எஸ்.பாளையத்தைச் சேர்ந்தவர் வஜ்ரகுமார் (55). பூ அலங்காரப் பணி செய்து வந்த இவர் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் நண்பருடன் மோட்டார்சைக்கிளில் சாம்ராஜ்பேட்டை 6-ஆவது குறுக்குத் தெருவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அந்த வழியாக வந்த டெம்போ வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த வஜ்ரகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார்.

    ஹெப்பாள் போக்குவரத்து காவல் சரகம்: பெங்களூரு தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் ஜவரய்யா (50). வங்கி ஊழியரான இவர் புதன்கிழமை இரவு ஹெப்பாள் பத்ரப்பா லேஅவுட் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ஜவரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இந்த விபத்துகள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துத விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரியல் எஸ்டேட் உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை

    பெங்களூரில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    பெங்களூரு சுபாஷ் லேஅவுட்டைச் சேர்ந்தவர் முதாஃபீர் (30). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து எலஹங்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai