Enable Javscript for better performance
ஜாதிவாரி கணக்கெடுப்பு: குடும்ப விவரங்களை பதிவு செய்தார் சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    ஜாதிவாரி கணக்கெடுப்பு: குடும்ப விவரங்களை பதிவு செய்தார் சித்தராமையா

    By பெங்களூரு,  |   Published on : 17th April 2015 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது முதல்வர் சித்தராமையா தனது குடும்ப விவரங்களைப் பதிவு செய்தார்.

    கர்நாடகத்தில் உள்ள 1.33 கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்காக கடந்த 11-ஆம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    இந்தக் கணக்கெடுப்பின் போது பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவிடம் கணக்கெடுப்பாளர் சிவக்குமார் விவரங்களை சேகரித்தார். அப்போது, தனது குடும்ப விவரங்களை அளித்த சித்தராமையா, மதம், தாய்மொழி, ஜாதி குறித்த விவரங்களை அளித்தார்.

    மேலும், தனது மனைவி பார்வதி, மகன்கள் ராகேஷ், யதீந்திரா என்றும், திருமணமானபோது வயது 29, பள்ளியில் சேர்ந்த வயது தெரியவில்லை, படிப்பு பி.எஸ்சி., எல்.எல்.பி.,என்றும் குறிப்பிட்டார்.

    கர்நாடக முதல்வராகப் பணியாற்றும் தனது குலத்தொழில் விவசாயம், ஆண்டு வருமானம் சரியாகத் தெரியவில்லை, 73 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் கேழ்வரகு, நெல், பயறுகள், தென்னை விளைவிக்கப்படுகின்றன.

    பெங்களூரில் சொந்த வீடு, வணிக வளாகம், சித்தராமனஹுண்டி கிராமத்தில் வீடு, சொந்தமாக ஒரு கார், தொழிற்சாலை இல்லை, வாரியங்கள் மற்றும் கழகங்களில் உறுப்பினராக இல்லை, இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறவில்லை என்று பதிலளித்தார்.

    கேள்விகளைப் பாதியில் நிறுத்திய போது, அனைத்து கேள்விகளையும் கேட்க வேண்டும், எதையும் விடக் கூடாது என்று சித்தராமையா, கணக்கெடுப்பாளருக்கு அறிவுறுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai