Enable Javscript for better performance
நிர்வாக வசதிக்காகவே மாநகராட்சி பிரிக்கப்படுகிறது: ஜி.பரமேஸ்வர்- Dinamani

சுடச்சுட

    

    நிர்வாக வசதிக்காகவே மாநகராட்சி பிரிக்கப்படுகிறது: ஜி.பரமேஸ்வர்

    By பெங்களூரு  |   Published on : 17th April 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிர்வாக வசதிக்காகவே பெங்களூரு மாநகராட்சி பிரிக்கப்படுவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

    காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெங்களூரு மாநகராட்சி பிரிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்க மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிப்பதில் அரசியல் லாபம் எதுவுமில்லை. நிர்வாக வசதிக்காகவே மாநகராட்சி பிரிக்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு பயம், அதனால்தான் மாநகராட்சியைப் பிரிக்க முயற்சிப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை.

    மாநகராட்சித் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும் என முந்தைய பாஜக அரசு தெரிவித்திருந்தது.

    மாநகராட்சியை கடந்த 5 ஆண்டுகளாக நிர்வகித்துள்ள பாஜக, எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் அமல்படுத்தவில்லை. மாறாக, நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை எதிர்த்து, வருகிற 19-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் கர்நாடகத்தில் இருந்து 2 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai