Enable Javscript for better performance
பாஸ்போர்ட் சேவை சிறப்பு முகாம்:ஏப்.20-இல் நேர்காணலுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பாஸ்போர்ட் சேவை சிறப்பு முகாம்:ஏப்.20-இல் நேர்காணலுக்கு விண்ணப்பிக்கலாம்

    By பெங்களூரு,  |   Published on : 17th April 2015 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாஸ்போர்ட் சேவை சிறப்பு முகாமில் பங்கேற்பதற்கான நேர்காணல் நேரத்தை பெற வருகிற 20, 21-ஆம் தேதிகளில் மாலை 4 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் பாஸ்போர்ட் சார்ந்த சேவைகளை பெறுவதற்கான தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிவமொக்கா, ஷாமையா கெளடா சாலையில் உள்ள சிவமொக்கா தொழில் வர்த்தகசபை அரங்கில் வருகிற 25, 26-ஆம் தேதி பாஸ்போர்ட் சேவை சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் சிவமொக்கா, சிக்மகளூரு, தாவணகெரே, ஹாவேரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். முகாமில் பங்கேற்க நேர்காணல் முன் அனுமதி பெறுவது அவசியம். இதற்காக நேர்காணல் நேரம் வழங்கப்படும்.

    வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க நேர்காணல் நேரம் பெற வருகிற 20-ஆம் தேதி மாலை 4 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ஏப்.26-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க நேர்காணல் நேரம் பெற வருகிற 21-ஆம் தேதி மாலை 4 மணி முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில் நாள்தோறும் 175 பேருக்கு மட்டுமே நேர்காணல் நேரம் ஒதுக்கப்படும். நேர்காணல் நேரம் பெற ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ர்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பப் பதிவு எண் (ஏ.ஆர்.என்.) பெற வேண்டும்.

    இணையதளம் மூலமே கட்டணமும் செலுத்த வேண்டும். பதிவு செய்த பிறகு வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். முகாம் தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai