Enable Javscript for better performance
பெங்களூரில் சட்ட விரோதக் குடியேற்றம் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் சட்ட விரோதக் குடியேற்றம் அதிகரிப்பு

    By பெங்களூரு,  |   Published on : 17th April 2015 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக பலர் பெங்களூரில் குடியேறி வருவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

    பெங்களூரில் வியாழக்கிழமை சமூக சேவகர் சுதீப் ஷெட்டியின் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் குறித்த குறுந்தகடை வெளியிட்டு அவர் பேசியது:

    பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக 50 ஆயிரம் பேர் குடியேறியுள்ளனர். சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கு பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கள்ள ரூபாய் நோட்டு விநியோகம், விபசாரம் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்திற்குப் பிறகு, அந்த மாநில மக்கள் பெங்களூரு தேவரபீசனஹள்ளி, காடுபீசனஹள்ளி, மொன்னகோலாலு, சோமசுந்தராபாளையா, வெளிவட்டச் சாலை பகுதிகளில் அதிக அளவில் குடியேறி உள்ளனர்.

    அவர்களில் 70 சதம் பேர் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவுபவர்களை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெங்களூரில் குடியேறியுள்ள வங்க தேசத்தவர்களைக் கண்டறிவதில் மாநில உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரித்தால், அதில் குறைந்தபட்சம் 3 வார்டுகளை வங்க தேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கு ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கர்நாடகத்தில் கன்னடர்கள் பெரும்பான்மையை இழந்து வருவது வேதனை அளிக்கிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai