Enable Javscript for better performance
பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்கும் முடிவில் மாற்றமில்லை: சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்கும் முடிவில் மாற்றமில்லை: சித்தராமையா

    By பெங்களூரு  |   Published on : 17th April 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்கும் முடிவில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்கும் திட்டத்தை கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது மாநகராட்சியைப் பிரிக்க எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் பாஜகவின் அரசியல் வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

    இதுகுறித்து பெங்களூரு காவிரி இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்கும் முடிவில் மாற்றமில்லை. கர்நாடக முனிசிபல் கார்ப்பரேஷன்ஸ் சட்டம்,1976-இல் திருத்தம் செய்வதற்காக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கட்டும்.

    நான் ஜாதி வாதம் செய்வதாக மஜத தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஜாதி வாதம் குறித்து பேசுவதற்கு மஜத தேசியத் தலைவர் தேவ கெளடாவுக்கும், மாநிலத் தலைவர் குமாரசாமிக்கும் தார்மீக உரிமையில்லை.

    குடும்ப அரசியல் செய்துவரும் தேவ கெளடாவுக்கு ஜாதி வாதம் குறித்து பேச உரிமையில்லை. சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பால் ஜாதிகள் அதிகரிக்கும் என்று கூறுவதில் உண்மையில்லை.

    மாநிலத்தில் வசிக்கும் 1.31 கோடி குடும்பங்கள் மற்றும் 6.5 கோடி மக்களிடமும் கணக்கெடுப்பாளர்கள் விவரங்களைப் பெறுகின்றனர். ஜாதி உள்பிரிவை குறிப்பிடுவதால், ஜாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது.

    பெங்களூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளுக்கு மிரட்டல் வருவதாக புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். ஜனதா கட்சிகள் ஒன்றிணைவது குறித்து எங்களுக்கு ஆட்சேபமில்லை என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai