Enable Javscript for better performance
மாணவர்களுக்கு நற்பண்புகளைப் போதிப்பது அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு நற்பண்புகளைப் போதிப்பது அவசியம்

    By பெங்களூரு  |   Published on : 17th April 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களுக்கு நற்பண்புகளைப் போதிப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டார்.

    பெங்களூரு ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரத சாரணர், சாரணியர் இயக்கம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது:

    இளம் வயதில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பது பெற்றோரின் கடமை. இந்த கடமையை கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வருவதில் சாரணர், சாரணியர் இயக்கத்தின் பங்களிப்பு அபாரமானது.

    பெற்றோர்கள் தைரியமானவர்களாக இருந்தால் மட்டுமே சாரணர், சாரணியர் இயக்கத்தில் தங்களது குழந்தைகளை சேர்ப்பார்கள். தாயிடமிருந்து பண்பாட்டையும், தந்தையிடமிருந்து வீரத்தையும் குழந்தைகள் கற்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு தைரியத்தை வழங்க தங்கள் குழந்தைகளை சாரணர், சாரணியர் இயக்கத்தில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். கல்வி, ஒழுக்கம், நேர்மை,பண்பு, பணிவு போன்ற குணங்களையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் போதிக்க வேண்டும். எளிமையான வாழ்க்கை முறை, விசாலமான அறிவை பெற மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

    நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ளவர்களாக நமது வாழ்க்கையை குழந்தைகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் இயக்கத் தலைமை ஆணையர் பி.ஜி.ஆர்.சிந்தியா, கல்வித் துறை ஆணையர் முகமது மோசின், இயக்க பொதுச் செயலாளர் சித்தையா, இயக்க இதழ் துணை ஆசிரியர் செல்லையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai