Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு எலஹங்கா காவல் சரகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

    கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜக்கப்பா (24). இவர் பெங்களூரு எலஹங்கா சீனிவாசபுராவில் புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, கட்டடத்தின் அருகே சென்ற மின் கம்பியில் அவரது கை உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே ஜக்கப்பா உயிரிழந்தார்.

    இதுகுறித்து எலஹங்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai