Enable Javscript for better performance
முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா.செயராமன் மறைவு: கர்நாடக திராவிடர் கழகம் இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா.செயராமன் மறைவு: கர்நாடக திராவிடர் கழகம் இரங்கல்

    By பெங்களூரு  |   Published on : 17th April 2015 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான மா.செயராமன் (93) மறைவுக்கு மறைவுக்கு கர்நாடக திராவிடர் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

    பெங்களூரு மாநகராட்சிக்கு 2 முறை மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயராமன் பெங்களூரில் புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து கர்நாடக திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

    கர்நாடக மாநில திராவிடர் கழகச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய மா.செயராமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியதோடு, தொழில்சங்கங்கள் அமைத்து தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். அவரது மறைவு கர்நாடகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai