Enable Javscript for better performance
\\\"கர்நாடகத் தமிழர்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "கர்நாடகத் தமிழர்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும்'

    By பெங்களூரு  |   Published on : 27th January 2015 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

    கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு, கலைஞரகத்தில் ஞாயிற்றுக்கிழமை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி அவர் பேசியது:

    கடந்த 1938 மற்றும் 1965-ஆம் ஆண்டுகளில் தமிழுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மொழிப் போரில் தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். உலகமே வியந்த மொழிப் போரில் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து பலர் உயிர்த் தியாகம் செய்தனர்.

    பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மொழியைக் காக்க நடத்திய போராட்டத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியமுள்ளது. கர்நாடகத்தில் தமிழர்களின் இல்லங்களில் தமிழ் ஒலித்தாலும், குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை.

    தமிழ் தெரியாமல் ஒரு தலைமுறை கர்நாடகத்தில் உருவாகி வருவது ஆபத்தானது. தமிழர்களின் அடையாளம் மொழி. எனவே, நமது அடையாளத்தை இழந்துவிடக் கூடாது. கர்நாடகத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கன்னடத்துடன் தமிழ் மொழியையும் போதிக்க வேண்டும். உலக மயமாக்கல் சூழலில் தமிழ் மொழியைக் காக்க வேண்டிய கடமை கட்சி பேதமின்றி தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது என்றார்.

    கட்சியின் தொழில் சங்கத் தலைவர் மு.நெடுமாறன், தலைமைக் கழகப் பேச்சாளர் அப்துல் ரகுமான்பாரி, மாநிலப் பொருளர் கே.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai