Enable Javscript for better performance
கொள்ளை முயற்சி:  துப்பாக்கியால் சுட்டு இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளை முயற்சி:  துப்பாக்கியால் சுட்டு இருவர் கைது

    By  பெங்களூரு  |   Published on : 28th January 2015 02:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
     பெங்களூரு எச்.எம்.டி.லேஅவுட் சோமண்ணா கார்டனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் முரளிமனோகர். இவர் கடந்த 23-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சித்தூருக்கு சென்றிருந்தாராம்.
     இதனிடையே, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 2 பேர், பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
     அப்போது, வீட்டின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இதுதொடர்பான தகவலை வித்யாரண்யபுரா காவல் ஆய்வாளர் புனித்குமாருக்கு தெரிவித்தனர்.
     இதையடுத்து, துணை ஆய்வாளர் பைரப்பா, தலைமைக் காவலர் நாகபூஷன் உள்ளிட்டோர் முரளி மனோகரின் வீட்டை சுற்றி வளைத்து, கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது, கொள்ளையர்கள் தலைமைக் காவலர் நாகபூஷனை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர்.
     இதையடுத்து, கைத்துப்பாக்கியால் கொள்ளையர்களின் கால்களை நோக்கி போலீஸார் சுட்டு பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிதுன் (26), அகில் (36) என்பது தெரியவந்தது.
     இதுகுறித்து வித்யாரண்யபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai