Enable Javscript for better performance
பெங்களூருவில் பிப்.22-இல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் பிப்.22-இல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம்

    By  பெங்களூரு  |   Published on : 28th January 2015 02:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் பிப். 22-ஆம் தேதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது.
     இதுகுறித்து பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை அர்ஜுனா விருது பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை ரீத்து அப்ரஹாம் செய்தியாளர்களிடம் கூறியது:
     சர்வதேச அளவில் பெண்களுக்கான சம அந்தஸ்து வழங்கப்பட்டாலும், இந்தியாவில் பெண்களில் உரிமைகள் பெறுவதில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். பெரும்பாலான பெண்கள் பணிக்கு சென்றுவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்வதால் அவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகின்றது.
     எனவே, பெண்கள் தங்களது சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மார்பு புற்றுநோய்களினால் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறைகள் மாறியதால் நீரிழிவு, ரத்த அழுத்த நோய்களைப் போல் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. இதை ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு சிசிக்கை அளித்து முழுமையாக குணமடைய செய்யலாம். இதுகுறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிப். 22-ஆம் தேதி பெங்களூருவில் பெண்களுக்கான 3, 5, 10 கி.மீட்டர் பிங்கத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகின்றன.
     பந்தயத்தின் போது அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். யாராவது மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது, நீச்சல் வீரர் மிலிந்த்சோமன், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நந்தினி ரோட்டிரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai